மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் பதிவெண்கள் பட்டியல் 15ம் தேதி வெளியாகிறது

schedule
2015-06-13 | 16:03h
update
2026-04-17 | 05:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர்: மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் பதிவெண்கள் பட்டியல் வரும் 15ம் தேதி மாலை 4.00 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடப்படும்

நடந்து முடிந்த மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுதிய பெரம்பலுர் மாவட்ட மாணவர்களின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் scan.tndge.in என்ற இணைய தளத்தில் 15.06.2015 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிடப்படும்.

Advertisement

இப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் வருகிற 16.6.2015 அன்று காலை 10.00 மணி முதல் http://www.dge.tn.nic.in, என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை தெரிவித்து தங்களுக்கான திருத்தப் பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 05:29:17
Privacy-Data & cookie usage: