மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் அக். 29ம் தேதி நடைபெற உள்ளது

மாவட்ட ஆட்சியர் தகவல்.

schedule
2015-10-26 | 13:08h
update
2026-03-27 | 15:12h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் வரும் அக். 29 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது, மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான இவ்விளையாட்டுப் போட்டிகளில், கை, கால் ஊனமுற்றோர்களுக்கான போட்டிகளில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீ ஓட்டமும், கை ஊனமுற்றோருக்கு 100மீ ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீ ஓட்டமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீ சக்கர நாற்காலி போட்டியும், குழுப்போட்டியில் ஷட்டில் பேட்மின்ட்டன் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டி 5 நபர்களுக்கு மற்றும் குழுப்போட்டிகளில் டேபிள் டென்னிஸ் குழுவிற்கு 2 நபர்களும் கலந்து கொள்ளலாம்.

Advertisement

பார்வையற்றோர்களுக்கான போட்டிகள். முற்றிலும் பார்வையற்றோர்களுக்கு 50மீ ஓட்டமும், குண்டு எறிதல் போட்டியும், மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீ ஓட்டமும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டிகளில் அடாப்டட் வாலிபால் ஒரு குழுவிற்கு 7 நபர்களும் கலந்து கொள்ளலாம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு. ஐக்யூ தன்மை முற்றிலும் இல்லாதோருக்கு 50 மீ ஓட்டமும், சாப்ட் பால் எறிதல் போட்டியும், நின்ற நிலையில் தாண்டுதல் போட்டியும், ஐக்கு தன்மை நல்ல நிலையில் இருப்போருக்கு 100 மீ ஓட்டமும், மிகக்குறைந்த பார்வையற்றோருக்கு சாப்ட் பால் எறிதல் போட்டியும், குழுப்போட்டியில் எறிபந்து ஒரு குழுவில் 7 நபர்களும் கலந்து கொள்ளலாம்.

காது கேளாதோர்களுக்கு. 100 மீ ஓட்டமும், 200 மீ ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 400 மீ ஓட்டமும், குழுப்போட்டியில்; கபாடி ஒரு குழுவில் 7 நபர்களும் பங்கு பெறலாம்.

வெற்றிபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். உணவுப்படி மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. எனவே அதிக அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை மென்மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.03.2026 - 15:12:25
Privacy-Data & cookie usage: