மின் கட்டணத்தைப் பெறக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

schedule
2015-08-26 | 15:58h
update
2026-04-17 | 04:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : கடந்த ஒரு வாரமாக மின் வாரிய அலுவலக கணினி மைய வசூல் பிரில் இணையதள பழுது காரணமாக மின் கட்டணம் செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டதைக் கண்டித்துஇ பொதுமக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலக கணினி மையத்தில் பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட ஒருசில பகுதியினரும், கல்பாடி, அகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், அங்குள்ள கணினியில் கோளாறு ஏற்பட்டதால் மின் கட்டணம் பெற முடியாது எனக் கூறி, மின் நுகர்வோர்களை கடந்த ஒரு வாரமாக திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால்இ மின் கட்டணம் செலுத்த வரும் நுகர்வோர் கடந்த ஒரு வாரமாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கு வியாழக்கிழமை (ஆக. 27) கடைசி தேதி என்பதால், காலை மின் கட்டணம் செலுத்துவதற்காக மின் நுகர்வோர் சென்றபோது, கணினியில் ஏற்பட்ட கோளாறு சீரடையவில்லை என மின் வாரிய அலுவலகத்தில் கூறப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உடனடியாக மின் கட்டணத்தைப் பெறக் கோரியும், கணினியை சீரமைக்கக் கோரியும் மின் வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 04:16:19
Privacy-Data & cookie usage: