கருணை அடிப்படையில் பணி வரன்முறை ஆணை வழங்க வலியுறுத்தி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

schedule
2015-07-12 | 15:10h
update
2026-05-26 | 15:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : கருணை அடிப்படையில் பணி வரன்முறை ஆணை வழங்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம், மாவட்ட அமைப்புச் செயலர் கமலக்கண்ணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் பாபு, அமர்நீதி, சம்பங்கி ராமையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இணைச் செயலர் சு. சரவணசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் பேசினார்.

கூட்டத்தில், திருச்சியில் ஆக. 8 ஆம் தேதி நடைபெறும் மாநிலப் பேரவையில் பங்கேற்பது. பதிவு எழுத்தர், இளநிலை உதவியாளர், பதிவரை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மாவட்ட அளவில் உள்ள அலுவலகப் பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் நடத்துவது.

Advertisement

இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கியதற்கு, பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது.
2 சதவீத ஆசிரியர் பதவி உயர்வு, பவானி சாகர் பயிற்சி, மாவட்ட அலுவலகங்களுக்கு அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர் பணியிடங்கள், கருணை அடிப்படையிலான பணிவரன் முறை ஆணை வழங்க வேண்டும்.

முதன்மைக் கல்வி அலுவலரின் (கணக்கு) நேர்முக உதவியாளர் பணியிடம், இணை இயக்குநர்களுக்கான நேர்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சாந்தி, அமுதா, சந்திரா, துரைசாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட செயலர் ஜெய. முகுந்தன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.05.2026 - 15:06:26
Privacy-Data & cookie usage: