பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 2011-12 முதல் 2015-16 முடிய 7,903 பயனாளிகளுக்கு 31,612 ஆடுகள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது.
விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்த பிறகு நன்கு பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்கள். பயனாளிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, 2011-12 மற்றும் 2012-13ல் கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு மேற்படி ஆண்டுகளின் தமிழ் புத்தாண்டு தினத்தில் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட கறவை பசுக்களின் பால் உற்பத்தித் திறனை பெருக்கவும், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளின் எடையினை அதிகரிக்கவும், தமிழகம் முழுவதும், 26.12.2015 மற்றும் 27.12.2015 ஆகிய நாட்களில் கறவைப் பசுக்களுக்கு, இனப்பெருக்க மருத்துவ பரிசோதனையும், வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு குடற்புழு நீக்க முகாமும் நடைபெற உள்ளது.
விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் மட்டும் அல்லாமல் அனைத்து விவசாயிகளும், இதர பொதுமக்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநரை 9442151611 என்ற அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.