12.8.2015 - agri meeting

பெரம்பலூர் : வேளாண்மைத்துறை மற்றும் சகோதரத் துறைகளின் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது தலைமையில் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.தரேஸ் அஹமது பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2015-ம் மாதம் சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 75 மி.மீ ஆகும். 12.08.2015 வரை ஆகஸ்ட் மாதம் 33.52 மி.மீ மழை பெய்துள்ளது, ஆகஸ்ட் 2015-ம் மாதம் முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழையளவு 270 மி.மீ ஆகும். 12.08.2015 வரை ஆகஸ்ட் மாதம் முடிய பெய்த மழை அளவு 361.32 மி.மீ ஆகும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது நெல் 363 எக்டரிலும், கரும்பு 4523 எக்டரிலும், பயிறுவகை பயிர்கள் 36 எக்டாpலும், தானியப்பயிர்கள் 328 எக்டரிலும், மற்றும் எண்ணெய்வித்து பயிர்கள் 304 எக்டரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம், பருத்தி மற்றும் சின்ன வெங்காய விவசாயிகளை ஊக்குவித்து உற்பத்திதிறனை அதிகப்படுத்திட இந்த ஆண்டு மக்காச்சோளம் மற்றும் பருத்தியில் 1000 செயல்விளக்கப்பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.

மக்காச்சோளத்தில் ஒரு ஹெக்டரில் 10 மெ.டன் மகசு+லும் பருத்தியில் 25 குவிண்டால் சாகுபடி செய்வதற்கும் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தலா 1000 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியின்போது விவசாயிகளை இலக்கீடு அடைவதற்கு தேவையான வழிமுறைகளையும், தொழில் நுட்பங்களையும் வேளாண்மை அலுவலர;கள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர;களை ஊக்குவிக்க வேண்டும்.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தில் 350ஹெக்டரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய இலக்கீடு பெறப்பட்டுள்ளது. 04.07.2015 அன்று நடைபெற்ற முகாமில் 200 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. இத்திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு ரூ.12,000ஃ- மானியமாகும். விவசாயிகளுக்கு உயிர் உரம் மற்றும் நுண்ணூட்டச்சத்து பாக்கெட்டுகள் வட்டார விரிவாக்க மையம் மூலமாக வழங்கப்படும், உரங்கள் தொடக்க வேளாண்மை சங்கங்களிலிருந்து பெற்றுத்தரப்படும். மீதமுள்ள தொகையினை விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வங்கிகணக்கில் வரவு வைக்கப்படும். எனவே விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்று சேரும் வகையில் அலுவலர;கள் அனைவரும் செயல்படவேண்டும் என பேசினார்.

மேலும், வேளாண்மைத்துறையில் மத்திய மற்றும் மாநில திட்டங்கள், தோட்டக்கலைத்துறையில் தேசிய தோட்டக்கலை இயக்கம், நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் பெருநகர காய்கறி சாகுபடி திட்டம், வேளாண் பொறியியல் துறையின் திட்டங்கள், மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பணிகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையின் சின்ன வெங்காய வணிக வளாக விற்பனை விவரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் தயார் நிலையில் வைக்க வேளாண்மை உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அய்யாசாமி, வேளாண்மை துணை இயக்குநர்ஃமாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வே) (பொ) ஆறுமுகம், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர்(பொ) இராஜேந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ), இந்திரா, வேளாண்மை துணை இயக்குநர்(மா.நீ.மே.மு) செந்தமிழ்ச்செல்வன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை களப்பணியாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!