விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை

schedule
2018-06-27 | 15:25h
update
2026-04-19 | 16:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் காவலர்கள் தாக்கியதால் அவமானமடைந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் ஏர்வாடிச் சாலையில் உள்ள மதுக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த வள்ளியூர் காவல் உதவி ஆய்வாளரும் காவலர்களும் சக்திவேலைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது குறித்துத் தனது மகனுக்குத் தெரிவிப்பதற்காக அவர் செல்பேசியை எடுத்தபோது அதைச் சாலையில் போட்டு உடைத்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள குமாரபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் ஏர்வாடிச் சாலையில் உள்ள மதுக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். அப்போது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த வள்ளியூர் காவல் உதவி ஆய்வாளரும் காவலர்களும் சக்திவேலைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது குறித்துத் தனது மகனுக்குத் தெரிவிப்பதற்காக அவர் செல்பேசியை எடுத்தபோது அதைச் சாலையில் போட்டு உடைத்துள்ளனர்.தனியார் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளித்தும் பயனின்றி சக்திவேல் நள்ளிரவில் உயிரிழந்தார். அவரது உடலைக் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர்.இதனிடையே தனது தந்தையைத் தாக்கிய காவலர்களைப் பணிநீக்கம் செய்து, தங்களுக்கு இழப்பீடு வழங்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என சக்திவேலின் மகன் தெரிவித்துள்ளார்.இதனிடையே சக்திவேலைத் தாக்கியதுடன் அவர் தற்கொலை செய்வதற்குக் காரணமான காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக் குமாரபுதுக்குடியிருப்பில் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அந்த வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து வள்ளியூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் உதயகுமார் வந்து சக்திவேலின் உறவினர்களிடம் பேச்சு நடத்தியதை அடுத்துப் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.

Advertisement

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 16:22:29
Privacy-Data & cookie usage: