pmk-vaithylingamபெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் க.வைத்திலிங்கம், கொத்தவாசல் கிராமத்தில் தனுது பிரச்சார பயணத்தை துவக்கிய அவர், நல்லறிக்கை, புதுக்குடிசை, துணிச்சப்பாடி, கொளப்பாடி, பெரியவெண்மணி, சின்ன வெண்மணி, கரம்பியம், பெரியம்மாபாளையம், மூங்கில்பாடி, ஒதியம், புதுவேட்டக்குடி, பு.வேட்டக்குடி புதூர், காடூர், தேனூர், துங்கபுரம், கிளியப்பட்டு, காரைப்பாடி, கோவிந்தராஜாபட்டினம், ஓலைப்பாடி, கல்லை, கீழகொட்டாய், வேப்பூர், நன்னை, சாந்தநத்தம் ஆகிய 25 க்கும் மேற்பட்ட ஊர்களில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார்.

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை விளக்கி பேசிய அவர், குன்னம் தொகுதி கல்வி, வேலைவாயப்பு, தொழில் துறை, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அப்போது பெரம்பலூர் பா.ம.க. மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அழகு.நீலமேகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!