வ.களத்தூர் அருகே குடும்பத்தகராறில் எலிமருந்து சாப்பிட்டு விவசாயி தற்கொலை

schedule
2015-06-24 | 14:56h
update
2026-04-06 | 09:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : வ.களத்தூர் அருகே உள்ள திருவாலந்துறை சிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சுணன (52). விவசாயியான இவருக்கும் அவரது மனைவி மாரியாயிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த அர்ச்சுணன் கடந்த 17-ந்தேதி வீட்டில் ஆள் யாரும் இல்லாதபோது எலியை கொல்வதற்காக வைத்திருந்த எலிமருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.

Advertisement

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அர்ச்சுணன் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வ.களத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேக் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.04.2026 - 09:46:39
Privacy-Data & cookie usage: