வ.களத்தூர் அருகே பஸ்சிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

schedule
2016-01-09 | 16:29h
update
2026-04-16 | 12:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 55 ) விவசாயி. இவர் கடந்த 5 ந் தேதி பசும்பலூரில் இருந்து பெரம்பலூருக்கு செல்லும் அரசு பேருந்தில் ஏறி சென்றுள்ளார். பேருந்து வ.களத்தூர் பிரிவு பாதை அருகே சென்ற போது பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி பெரியசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.04.2026 - 12:46:09
Privacy-Data & cookie usage: