கூட்டுறவு சங்கம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.65 கோடி கடனுதவி; ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்.

schedule
2021-01-14 | 03:46h
update
2021-01-14 | 03:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

1.65 crore loan to women’s self-help groups on behalf of the Co-operative Society; Presented by RT Ramachandran MLA.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுகுடல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் உறுப்பினர்களுக்கு ஒரு கோடியே 65 லட்சம் மதிப்பிலான கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. முன்னதாக சிறுகுடல் கூட்டுறவு சங்க தலைவர் சித்தளி நாகராஜ், அனைவரையும் வரவேற்றார். சரக துணைப்பதிவாளர் பாண்டித்துரை, முன்னிலை வகித்தார்.

Advertisement

பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏவும் மான ஆர்.டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறுவணிகக்டன், தனிநபர்க்கடன், மகளிர் கூயஉதவிக்குழு கடன் என மொத்தம் ஒரு கோடியே 65லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கிய அவர் பேசியதாவது:

இந்த சங்கம் கடந்த ஜந்தாண்டுகளுக்கு முன் ஒரு கோடியே 15 லட்சம் கடனில் இருந்தது. தற்போது சங்க நிர்வாக்குழு மற்றும் பணியாளர்களின் அயராத உழைப்பால் சங்கம் லாபத்தில் செயல்படுகிறது. மேலும் இந்த வட்டாரத்தில் இரண்டாவது பெரிய கடன் சங்கமாக வளர்ந்ததற்க்கும் அதற்கு காரணம் இப்பகுதியில் உள்ள சங்க உறுப்பினர்கள் கடன் பெற்று விவசாயத்திற்கு பயன்படுத்தி பின்னர் கடனை திருப்பி செலுத்தியதே இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு காரணம். தேசிய வங்கியில் கடன் பெற வேண்டுமானால் சொத்தை அடமானம் வைத்து கடன் பெற வேண்டும். அப்படி விவசாயிகள் சிரமப்படக்கூடாது என்பதற்காக கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.

கூட்டுறவு வங்கி துணை தலைவர் பெரியசாமி, உதவி செயலாளர் பழனிவேல், ஒன்றிய செயலாளர்கள் தெற்கு கிருஷ்ணசாமி, வடக்கு செல்வமணி, குன்னம் பால் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தங்கபாலமுருகன், தகவல் தொழில் நுட்ப ஒ . செயலாளர் கண்மணிதுரை, கீழப்புலியூர் ஊராட்சித் தலைவர் சாந்திசெல்வராஜ், மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வங்கி செயலாளர் அழகுவேல் நன்றி கூறினார்

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 06:59:03
Privacy-Data & cookie usage: