திமுக சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 1லட்சம் பேரிடம் கையெழுத்து!

schedule
2020-02-01 | 15:45h
update
2020-02-01 | 15:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

1 lakh signatures on behalf of DMK demanding withdrawal of citizenship law

Advertisement

பெரம்பலூரில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் மாவட்டத்தில்
பிப். 02 முதல் 08 வரை நடைபெறும் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி குறித்து தி.மு.க.மற்றும் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் குன்னம் சி .இராஜேந்திரன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வீ.ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை, திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் சி.தங்கராசு, ஐ.ஜே.கே. மாவட்ட தலைவர் எம்.டி.அன்பழகன், இந்திய தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் பி.ஆர்.ஈஸ்வரன், பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
11.07.2026 - 22:05:22
Privacy-Data & cookie usage: