பெரம்பலூர் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் 10 பவுன், 1.5 லட்சம் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை; போலீசார் விசாரணை!

schedule
2024-03-17 | 06:44h
update
2026-06-23 | 19:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

10 pounds, 1.5 lakh loot from 3 consecutive houses near Perambalur: Mysterious gangs; Police investigation!

பெரம்பலூர் அருகே உள்ள சோமண்டாபுதூர் கிராமத்தில் இருப்பவர் அய்யம்பெருமாள் மகன் சுப்ரமணியன்(70), விவசாயியான இவர் நேற்றிரவு வழக்கம் போல், வீட்டின் மாடியில் தனது மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். வீட்டிற்குள் அவரது மகள் அருள்மொழி தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

Advertisement

நள்ளிரவு நேரத்தில், வீட்டிற்குள் ஆள் நடமாட்டம் இருப்பதை உணர்ந்த அருள்மொழி எழுந்து சத்தம் போட்டவாறு பெற்றோரை அழைத்துள்ளார். அவர்கள் வந்து வீட்டிற்குள் பார்த்த போது வீட்டினுள் வைத்திருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த, 6 1/4 பவுன் தங்க நகை, 2ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதேபோல், பெரியசாமி(40) – வசந்தி(35), தம்பதியினரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் வீட்டினுள் எதுவும் திருடு போகாத நிலையில், அதே பகுதியில் உள்ள நல்லுசாமி மகன் ஜெயக்குமார்(45), 3 1/2 பவுன் தங்க நகை, ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்ரமணியன், வசந்தி, ஜெயக்குமார் ஆகிய மூவரும் திருட்டு சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார்ருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு செய்து தடயங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை அடையளாம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வீட்டின் உரிமையாளர்கள் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த போது நடந்த இந்த திருட்டு சம்பவம், சோமண்டா புதூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
23.06.2026 - 19:22:52
Privacy-Data & cookie usage: