100 ஆண்டு பழமையான பெரு மாள் கோயில் தேர் ரூ. 40 லட் சம் செலவில் மறு சீரமைக்கும் பணி

schedule
2015-06-21 | 14:51h
update
2026-04-19 | 13:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : பெரம்பலூரில் 100 ஆண்டு பழமையான மதன கோபால சுவாமி கோயில் தேர் ரூ. 40 லட்சம் செலவில் மறு சீரமைக்கும் பணி நடந்து வரு கி றது.

பெரம்பலூர் மரகதவல்லித் தாயார் சமேத மதன கோபால சுவாமி (பெருமாள்) கோயில் உள்ளது. மகா பாரத காலத்து பஞ்ச பாண்டவர் பூஜித்த ஸ்தலமாகவும், வியாக்ரபாத முனிவர் அருள் பாலித்த ஸ்தலமாகவும் இந்தக் கோயில் கூறப்படுகிறது.

1000 ஆண்டு பழமை யான இந்தக்கோயில் தற்போத இந்து சமய அறநி லையத் துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. கோயிலின் முன்பு 40 அடி உயரத்திற்கு ஒரே கல்லால் ஆன கம்பத்து ஆஞ்சநேயர் கல் தூண் உள்ளது இந்தக் கோயிலுக்கு உரிய தனிச் சிறப்பாகும்.

Advertisement

ஆண்டு தோறும் காவிரியிலிருந்தும் கங்கையிலிருந்தும் புனித நீர் சுமந்து வந்து இந்தக் கல்தூணுக்கு வழிபாடு செய்யப் படுவது வழக்கம்.

மேலும் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் தன்று இந்தக் கோயிலில் தேரோட்டம் நடத்தப்படும். நூற்றாண்டு பழமையான தேர் பழுதடைந்து காணப்பட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடத் தப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தின் சார்பாக பழைய தேரை இலுப்பை மரத்தால் புதுப்பிக்கத் திட்டமி டப் ட்டு, மறு சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.

பொது மக்களிடமிருந்து திரட்டப் படும் நிதி மூலம் சுமார் ரூ. 40 லட்சத்தில் இந்தத் தேர் புதுப்பிக்கப் பட உள்ளது.

கடந்த 1ம் தேதி தேர் புதுப்பிக்கும் பணி தொடங்கப் பட்டது. இதற்காக தேரினை பிரித்தெடுக்கும் பணி இன்று நிறைவுற்றது.

அதன் பின் தேர்கட்டுமானம் துவங்கும். ஓராண்டுக்குள் இந்த பணி முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.

பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயிலின் 100 ஆண்டு பழமையான தேரை புதுப்பிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. இதை யொட்டி, தேரை பிரித்து புதிய மறு சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளன.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 13:36:48
Privacy-Data & cookie usage: