குரும்பலூர் பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் தொடக்கம்: பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு!

schedule
2022-06-02 | 17:56h
update
2022-06-03 | 04:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

100 day work program launched in Kurumbalur Town panchayat: Perambalur Collector Inspection!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 பேரூராட்சிகளில் முதல் கட்டமாக, குரும்பலூர் பேரூராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆண்டியான்குளம், தெப்பக்குளம், சின்னான் குளம் ஆகிய 3 குளங்கள் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும், மருதையான் குளம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலும், நல்லதண்ணி குளம் ரூ.5 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் 5 பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆண்டியான் குளத்தில் நடந்த தூர்வாரும் பணியினை கலெக்டர் வெங்கடபிரியா நேரில் ஆய்வு செய்தார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம், யோசேப்பு சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பீட்டிலும், டாக்டர்.அம்பேத்கார் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1.26 லட்சம் மதிப்பீட்டிலும், குரும்பலூரில் உள்ள மணிப்புறா சுய உதவிக்குழுவினருக்கு ரூ.3.78 லட்சம் மதிப்பீட்டடிலும், மேலப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட திருப்பெயர் கிராமத்தில் உள்ள சங்குபூ சுய உதவிக்குழுவினருக்கு ரூ.4.05 லட்சம் மதிப்பீட்டடிலும் என மொத்தம் 4 சுய உதவிக்குழுவினருக்கு ரூ.10.74 லட்சம் மதிப்பீட்டில் சுயதொழில் துவங்க வங்கிக் கடன் உதவித் தொகைக்கான ஆணைகளையும், தலா ரூ.50,000 வீதம் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு கடனுதவி தொகைக்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்.

Advertisement

இந்த ஆய்வின்போது, திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் காளியப்பன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் பாலமுருகன், பொது விநியோகத்திட்ட துணை பதிவாளர் செல்வராஜ், குரும்பலூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா ரமேஷ், குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மெர்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 19:46:15
Privacy-Data & cookie usage: