பெரம்பலூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில், பணிதள பொறுப்பாளரை மாற்றியதற்கு சாலைமறியல்!

schedule
2023-12-10 | 04:38h
update
2023-12-10 | 04:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

100-day work project near Perambalur, road block to change site manager!

பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூரில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்தவர் அந்தோணியம்மாள். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பொறுப்பிலிருந்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நீக்கியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில் அரசலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு திடீரென அந்தோணியம்மாளின் பணி நீக்கத்தை கண்டித்து அரசலூர் பஸ் நிறுத்தம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பெரம்பலூர் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்தனர். மேலும் அந்தோணியம்மாளின் பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி கோஷம் எழுப்பினார்கள்.

தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் பேசி தீர்வு காணலாம் என போலீசார் கூறியதையடுத்து சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 21:38:40
Privacy-Data & cookie usage: