106 crore loan and financial assistance to 2021 self help groups in Ramanathapuram district

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அளவில் 2021 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105.91 கோடி மதிப்பில் கடன் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பாக தமிழ்நாடு மாநிலம் முழுவதும் உள்ள 58,463 சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த 7,56,412 உறுப்பினர்களுக்கு ரூ.2749.85 கோடி மதிப்பிலான கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, திருவள்ளுர் மாவட்டம் திருத்தனியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சார்ந்த பயனாளிகளுக்கு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து ராமநாதபுரம் ஏ1 மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் சங்கர் லால் குமாவத், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் மாவட்ட அளவில் மகளிர் திட்டம் சார்பாக 1,979 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.105.67 கோடி வங்கி கடன் இணைப்பு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதில் 159 சுய உதவி குழுக்களுக்கு ரூ.17.20 கோடி மதிப்பிலும், ஆடு வளர்ப்பு வங்கி பயனாளிகள் 7 நபர்களுக்கு ரூபாய் 7 லட்சம், சமுதாய முதலீட்டு நிதியாக 25 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12.50 இலட்சம், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பாக மகளிர் சுய உதவிக் குழு சார்ந்த பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு சமுதாய பண்ணை பள்ளி மற்றும் சமுதாயத்தின் பள்ளி தொடங்க நிதி உதவியாக 10 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.20 லட்சம் என மொத்தம் 2021 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.105.91 கோடி மதிப்பில் கடன் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டன. மேலும், திருவள்ளுர் மாவட்டம், திருத்தனியில் தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த பயனாளிகள் பார்த்திடும் வகையில் இணைய வழியில் மின்னணு திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஊராட்சி திசைவீரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் விஜயலட்சுமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்ட செயல் அலுவலர் பிரேம்குமார் உட்பட அரசு அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்த பயனாளிகள் பங்கேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!