108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டிரைக் அறிவிப்பு!

schedule
2026-10-05 | 16:12h
update
2026-10-05 | 16:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Perambalur: 108 ambulance employees announce strike to press for their demands!

108 ஆம்புலன்ஸ்கள் தமிழ்நாட்டில் சுமார் 1,353 இயங்கி வருகின்றன. இதில், வேலை பார்க்கும் சுமார் 7,000 தொழிலாளர்கள், 11 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசுக்கும், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக முன்வைத்தும். இதுவரை உரிய தீர்வு எட்டப்படாததால், தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கவும் மற்றும் 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும், வரும் நவ. 3 அன்று இரவு 8.00 மணியில் அடுத்த நாள் இரவு 08.00 மணி வரை (24 மணி நேரம்) வேலை  நிறுத்தம் நடத்த உள்ளதாக பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அப்துல் ராசிக் இடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். அதில் மேலும், அதில் தெரிவித்துள்ளதாவது:

2008ஆம் ஆண்டு முதல் 108 அவசர ஊர்தி சேவையை, தற்போது நடைமுறையில் உள்ள பப்ளிக் பிரைவேட் ஒப்பந்த முறையைக் கைவிட்டு, தமிழ்நாடு அரசு நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். முழுமையாக தமிழ்நாடு அரசு செலவில் இயங்கி வரும் இச்சேவையை அரசு நேரடியாக நிர்வகிப்பதுடன், இதில் பணிபுரியும் சுமார் 7,000 தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும்.

Advertisement

தொழிலாளர் தீர்ப்பாயத் தீர்ப்பை உடனடியாக முழுமையாக அமல்படுத்த வேண்டும், 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும், 2026ஆம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை 25% ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு மற்றும் மருத்துவக் காப்பீட்டை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், பணியின்போதும் பணிக்கு வெளியேயும் உயிரிழப்புக்கான காப்பீட்டுத் தொகையை உயர்த்த வேண்டும். வேலை நேரத்தை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும், மாதத்தின் முதல் வேலை நாளிலேயே முழு சம்பளம் மற்றும் 5ஆம் தேதிக்குள் Salary Slip வழங்க வேண்டும்,

பிக்ஸ்சடு ட்ரேம் எம்பிளாய்மெண்ட் முறையை கைவிட்டு, தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தி, பணி இழந்தவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு, பெய்டு லீவு மற்றும் பண்டிகைக் கால பணிக்கான பணப்பலன்களை மீண்டும் வழங்க வேண்டும், தண்டனை கால பணி மாற்ற நடைமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். அப்போது மாநில அமைப்பு செயலாளர் வி.ஜெயராஜ், மாவட்டத் தலைவர் எம். ராஜா, மாவட்ட செயலாளர் ஆர்.சுரேஷ், மாவட்ட பொருளாளர் கே.லெட்சுமணன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கி.வெங்கடேசன், உள்ளிட்ட பலர் உடன் சென்றிருந்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.10.2026 - 16:32:38
Privacy-Data & cookie usage: