அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் 10 ஆம் ஆண்டு ரத்த தான முகாம்! நிறுவனர் கே.ஆர்.வி கணேசன் தொடங்கி வைத்தார்.

schedule
2022-11-27 | 02:42h
update
2022-11-27 | 03:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

10th Annual Blood Donation Camp by Ashwins Group! Inaugurated by founder KRV Ganesan.

பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது

பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் இலவச ரத்த தான முகாம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு, பத்தாவதுஆண்டாக  இலவச ரத்ததான முகாம், புதிய பஸ் ஸ்டாண்டு எதிரே உள்ள அஸ்வின்ஸ் பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. ரத்ததான முகாமை அஸ்வின்ஸ் குழுமத்தின் நிறுவன தலைவர் கே.ஆர்.வி கணேசன் தொடங்கி வைத்தார். மேலும், ரத்தானம் வழங்கியவர்ளுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.

Advertisement

இதில் அஸ்வின்ஸ் குழுமத்தின் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். அவர்களிடமிருந்து முத்து ரத்த வங்கி நிர்வாகி வீரமுத்து, மருத்துவர்கள் வெங்கட்ரமணண், பிரகாஷ் ஆகியோர் உரிய மருத்துவ பரிசோதணை செய்து ரத்தத்தை தானமாக பெற்றனர். இந்த இலவச ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை அஸ்வின்ஸ் குழுமத்தின் மனித வள மேம்பாட்டு பிரிவு அலுவலர் சரவணண், நேர்முக உதவியாளர் சூரி என்கிற வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.08.2026 - 06:03:57
Privacy-Data & cookie usage: