115 பெண்களுக்கு ரூ. 72 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ வழங்கினார்.

schedule
2017-05-31 | 13:02h
update
2026-04-08 | 16:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

படித்த ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமண உதவித்தொகையுடன் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமசந்திரன் கலந்து கொண்டு பட்டப் படிப்பு படித்த 100 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் வீதம் 800 கிராம் எடையுள்ள தங்கத்ததையும் (மதிப்பு ரூ.22 வட்சத்து 21 ஆயிரத்து 600), ரூ.50,000 வீதம் ரூ. 50,00,000 மதிப்பிலான உதவித் தொகைக்கான காசேலைகளையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.

Advertisement

அதனை தொடர்ந்து கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி, விதவை பயனாளிகள் 15 நபர்களுக்கு தலா ரூ.7,290 வீதம் ரூ.1,09,350 மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களையும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.ராமச்சந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) பூங்கொடி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 16:29:08
Privacy-Data & cookie usage: