பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை : பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு

schedule
2019-05-30 | 16:19h
update
2019-05-30 | 16:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

12 years imprisonment for raping a woman: Perambalur court verdict

பெரம்பலூர் அருகே ஆசை வார்த்தைக்கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் சர்க்கரை ஆலை பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் மகன் விஜய் (எ)விஜயகுமார் (29). கூலித்தொழிலாளி. வேப்பந்தட்டை அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகள் சோனியாகாந்தி (26). இவர்கள் இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம்.

Advertisement

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாய் ஆசை வார்த்தைக் கூறி கடந்த 2017 நவம்பர் மாதம் முருக்கன்குடி வனப்பகுதிக்கு சோனியாகாந்தியை அழைத்துச் சென்ற விஜயகுமார், அங்கு பலாத்காரம் செய்துவிட்டாராம். இதையடுத்து விஜயகுமாரின் பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்துவந்தனராம்.

இதையறிந்த சோனியாகாந்தி தனது உறவினருடன் சென்று தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதற்கு விஜயகுமார் மற்றும் அவரது பெற்றோர் தகாத வார்த்தைகளால் திட்டயதோடு, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ்ஸ்டேசனில் சோனியாகாந்தி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் விஜயகுமார் ஜாமினில் வெளியேவந்துள்ளார்.

இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்ல் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் வினோத்குமார் ஆஜரானார். நேற்று வழக்கை விசாரித்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த விஜயகுமாருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும், அபராதத் தொகை செலுத்தினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

மேலும் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதற்கு ஓராண்டு சிறைதண்டனையும், 2 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 3 மாதம் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் எனவும், இந்த இரண்டு தண்டனையும் ஏகபோககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என நீதிபதி விஜயகாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து குற்றவாளி விஜயகுமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.04.2026 - 02:07:18
Privacy-Data & cookie usage: