14 type certificates, ration card include provided by the e-service applications : Government
பெரம்பலூர் மாவட்டத்தில் புதுவாழ்வு திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், எல்காட் நிறுவனம் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனம் ஆகியன மூலம் 184 பொது சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

வருவாய்த்துறையில் இருப்பிடம், வருமானம், முதல்பட்டதாரி, சாதி மற்றும் கணவனால் கைவிடப்பட்டவருக்கான சான்றிதழ் உள்ளிட்ட 5 வகையான சான்றிதழ்களும், நிலம் பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களும், சமூக நலத் துறையின் கீழ் திருமண உதவித் தொகை மனுக்களும் இப்பொது சேவை மையங்கள் மூலம் இணையவழியாக பெறப்பட்டு இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

அடுத்தகட்டமாக வருவாய்த்துறையின் சார்பில் வழங்கப்படும் வாரிசு சான்றிதழ், இதர பிற்பட்ட வகுப்பினர் சான்றிதழ், குடிபெயர்ச்சி சான்றிதழ், வேலையில்லா சான்றிதழ், விதவை சான்றிதழ், பள்ளி/கல்லூரி சான்றிதழ் தொலைந்தமைக்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சிறு/குறு விவசாயி சான்றிதழ், சொத்துமதிப்பு சான்றிதழ், ஆண் குழந்தை இல்லா சான்றிதழ், திருமணமாகாதவர் சான்றிதழ் மற்றும் நகை அடகு தரகர் உரிமம், பணம் கடன் கொடுப்பவர் உரிமம் கீழ், உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், திருத்தங்கள் மற்றும் குடும்ப அட்டையில் பொருள் நிறுத்தம் மீள கேட்டல் உள்ளிட்ட விண்ணப்பங்கள் உள்ளிட்ட 14 வகையான சான்றுகளுக்கான மனுக்கள் இணையவழியாக பெற்று இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

அதற்கென வருவாய்த்துறை அலுவலர்களுக்கும், உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்களுக்கும் இணையவழியாக மனுக்கள் பரிசீலனை செய்வது குறித்து ஏற்கனவே உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2017 முதல் வருவாய்த் துறையின் கீழ் மேலே சொல்லப்பட்டுள்ள 14 வகையான சான்றிதழுக்கான மனுக்களும்,, உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களும் பொது சேவை மையங்கள் வழியாக மட்டுமே பெறப்படும், வட்ட அலுவலகங்களில் பெறப்படமாட்டாது.

எனவே, பொதுமக்கள் தங்களது கிராமத்தில் உள்ள புதுவாழ்வு திட்டம் மற்றும் மகளிர் திட்டம் மூலம் செயல்பட்டு வரும் பொது சேவை மையங்களிலேயே மேற்சொல்லப்பட்டுள்ள சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2023 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!