பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது!

schedule
2021-08-04 | 16:16h
update
2021-08-04 | 16:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

144 restraining orders came into force in key places of Perambalur district!


கொரோனா வைரஸ் நோய் பரவாமல் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என பெரம்பலூர் கலெக்டர்விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர் பேரூராட்சி மற்றும் லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட கீழ்கண்ட பகுதிகளுக்கு மட்டும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 பிரிவு 144 இன் கீழ் 04.08.2021 காலை 06.00 மணி முதல் 10.08.2021 மாலை 06.00 மணிவரை தடை உத்திரவு பிறப்பிக்கப்படுகிறது.

பெரம்பலூர் நகராட்சி

1.பெரம்பலூர் சிவன் கோவில் முதல் வானொலி திடல் சந்திப்பு வரை
2.வானொலி திடல் முதல் பழைய பேருந்து நிலையம் வரை
3.பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை
4.பழைய பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதி
5.போஸ்ட் ஆபிஸ் தெரு,
6.கடைவீதி என்.எஸ்.பி ரோடு,
7.பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகள்,

அரும்பாவூர் பேரூராட்சி
1.தழுதாழை சாலை முதல் அரும்பாவூர் பேரூராட்சி அலுவலகம் வரை.
2.பாலக்கரை முதல் அ.மேட்டூர் வரை

லப்பைக்குடிக்காடு பேரூராட்சி
1.மாட்டு பாலம் முதல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை

Advertisement

மேலும் கீழ்கண்ட செயல்பாடுகளுக்கு சில கட்டுபாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. மருந்தகங்கள், பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான செயல்பாடுகள் மட்டும் உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது
·இதனை தவிர்த்து .பிற விற்பனை மையங்கள் அனைத்தும் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணிவரை மட்டுமே உரிய காற்றோட்ட வசதியுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
· கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளா; பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். குளிர் சாதன வசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர்கள், பெரம்பலூர் நகராட்சி ஆணையர் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா மூன்றாம் அலை நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும். எனவே, கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மேற்கண்ட கட்டுப்பாடுகளுடன் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 பிரிவு 144 – இன்கீழ் ஊரடங்கு உத்திரவு பிறப்பித்து ஆணையிடப்படுகிறது.
· இந்த உத்தரவு 04.08.2021 காலை 06.00 மணி முதல் 10.08.2021 மாலை 06.00 மணிவரை வரை அமுலில் இருக்கும், என தெரிவித்திருந்தார். இன்று அது அமலுக்கு வந்தது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.06.2026 - 04:55:09
Privacy-Data & cookie usage: