திருப்பதிக்கு சென்றவர் வீட்டில் திருட்டு : 15 பவுன் ரொக்கம் 2 லட்சம் திருட்டு! பெரம்பலூர் அருகே சம்பவம்!!

schedule
2021-02-22 | 07:05h
update
2021-02-22 | 07:07h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

15 pound cash 2 lakh theft! Incident near Perambalur !!

பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பெரியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சதீஷ் (வயது 45). நேற்றிரவு அவரது குடும்பத்தாருடன் சுமார் 15 பேர் 3 கார்களில் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்று விட்டனர். இந்நிலையில் காலை அவரது வீட்டின் கதவு உடைந்து கிடப்பதாக அரும்பாவூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய், தடய அறிவியல் நிபுணர்கள் வரவமைக்கப்பட்டு, மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்து தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில், வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோ, அலமாரிகள் டேபிள்களை உடைத்து, அலசி ஆராய்ந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க நகை 15 பவுன், ரொக்கம் ரூ.2 லட்சம் கொள்ளையர் எடுத்து சென்றது தெரிய வந்தது. இது வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமாரா வீடியோக்களை ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பதிக்கு சென்றவர்கள் திரும்ப சொந்த ஊருக்கு வந்தால் மட்டுமே திருடு போனது குறித்து முழுவிவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.06.2026 - 05:01:01
Privacy-Data & cookie usage: