பெரம்பலூர் அருகே இரு இடங்களில் 15 பவுன் நகை செல்போன் கொள்ளை: சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை !

schedule
2022-06-25 | 17:19h
update
2022-06-25 | 17:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

15 pound jewelery cell phone robbery at two places near Perambalur: Police investigate with CCTV footage!

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் மனைவி வனிதா (27), இவர் இன்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள மாமனார், மாமியாருடன், வயலில் வெங்காயம் வைப்பதற்காக சென்றுவிட்டு. மதியம் 1 மணி அளவில் வந்த பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 13 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களின் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

அதே போல, தேனி மாவட்டத்தை சிவா என்பவர் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இன்று தனது மனைவி அழகுராணியுடன் இன்று கடைக்கு சென்ற நிலையில் அப்பகுதியில் நோட்டமிட்ட 2 இளம்பெண்கள், சிவா பூட்ஸ்-சில் வைத்து சென்று சாவியை எடுத்து வீட்டில் 2.5 பவுன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் எடுத்து சென்றுள்ளனர். இது குறித்த சி.சி.டிவி. காட்சிகள் அப்பகுதியில் கிடைத்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இளம்பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்,

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவங்கள் பொதுமக்களை மேலும், அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 23:34:38
Privacy-Data & cookie usage: