16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தை தாய்மார்களுக்கு வழங்கினார் ஆட்சியர் தரேஸ்அஹமது

schedule
2015-09-12 | 08:46h
update
2026-04-21 | 05:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் : 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுபெட்டகம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஸ் அஹமது, பங்பேற்பு

தமிழக முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக சுகாதாரத்துறையில் திருத்தியமைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டம், மாதவிடாய் சுகாதாரத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டம், நகரும் மருத்துவமனைத்திட்டம் என்று அடுக்கடுக்கான சிறப்பான திட்டங்களின் வரிசையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டத்தை சட்டமன்றப்பேரவையில் அறிவித்து 07.09.2015 அன்று சென்னை தலைமை செயலகத்தின் மூலம் இத்திட்டத்தை துவக்கி வைத்தார். நடப்பாண்டில் ரூ.67 கோடி செலவில் இத்திட்டம் செலவிடப்படவுள்ளது.

Advertisement

அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று (செப்.12) துவக்கி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் தரேஸ் அஹமது , நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருதராஜா (பெரம்பலூர்), சந்திரகாசி (சிதம்பரம்), சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்சசெல்வன் தமிழ்ச்சசெல்வன் ஆகியோர் தாய்மார்களிடம் 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுபெட்டகத்தை வழங்கினர்.

இந்த பரிசு பெட்டகத்தில் பராமரிப்புத்துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை கொசுவலை, குழந்தை நாப்கின், குழந்தை எண்ணெய், குழந்தை ஷாம்பு, குழந்தை சோப்பு, குளியல் சோப், கை கழுவும் திரவம், சோப்பு பெட்டி, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சௌபாக்கியா சுண்டி லேகியம், அம்மா பரிசு பெட்டகம் உள்ளிட்ட 16 வகையான பொருட்கள் அடங்கும்.

இன்றைய நிகழ்ச்சியில் 70 தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசுபெட்டகம் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு 700 அம்மா குழந்தை நல பரிசுபெட்டகங்கள் வரப்பெற்றுள்ளது. அரசு தலைமை மருத்துவமனை மட்டுமல்லாது பெரம்பலூர் மாவட்த்தில் உள்ள 2 அரசு மருத்துவ மனைகள் மற்றும் 28 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த அம்மா பரிசு பெட்டகம் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர் மன்றத் தலைவர் ரமேஷ், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை இணைஇயக்குநர் மரு.உதயகுமார், துணை இயக்குநர் சேரன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் விஜய் ஆனந்த், மாவட்ட கவுன்சிலர் வடிவேலு உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2026 - 05:32:00
Privacy-Data & cookie usage: