பெரம்பலூர் அருகே 16 பவுன் தங்க நகை, 65 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு: மர்ம நபர்கள் கைவரிசை!

schedule
2021-01-19 | 07:26h
update
2026-06-15 | 05:46h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

16 pound gold jewelery, 65 thousand cash stolen near Perambalur: Mystery persons handcuffed

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூர் கிராமம், இந்திரா நகரைச் சேர்ந்த நாராயணசாமி மகன் கலியமூர்த்தி(38), விவசாயி. நேற்று காலை 9 மணிக்கு பூட்டை போட்டு மூடி விட்டு வயலுக்கு சென்றுவிட்டு மாலை 4 மணிக்கு வீட்டை வந்த பார்த்த போது வீடு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டினுள் சென்று பார்த்த போது, 16 பவுன் தங்க நகைகள், 65 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், வீட்டை பூட்டிய கலியமூர்த்தி, சாவியை அருகே வைத்து சென்றதை எடுத்து திருடர்கள் வீட்டை திறந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையடித்து சென்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்றே பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி விவாசயி வீட்டில் 23 பவுன் தங்கநைகை 40 ஆயிரம் ரொக்கமும், வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளில் 7பவுன் தங்க நகை, ஒன்றரை லட்சம் ரொக்கப்பணமும் கொள்ளை போன சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளன.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.06.2026 - 05:46:38
Privacy-Data & cookie usage: