பெரம்பலூர் அருகே வீட்டில் இருப்பவர்கள் தூங்கி கொண்டிருக்கும் போதே, அடுத்த 2 வீடுகளில் 16 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் கொள்ளை!

schedule
2022-07-25 | 12:37h
update
2022-07-25 | 12:37h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

16 pounds of jewelery and 20 thousand rupees were stolen from the next 2 houses while the people of the house near Perambalur were sleeping!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ளது கல்லை கிராமம். அங்கு2 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில், வீட்டு உரிமையாளர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போதே நள்ளிரவில் வீடு புகுந்து 16 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்க பணம் துணிகர கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கல்லை கிராமத்தில் மாரியம்மன் கோயில்தெருவில் வசிக்கும் விவசாயி மணி – தமிழரசி தம்பதியர் வீட்டின் முன்புற வராண்டாவில் படுத்திருந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவிலிருந்த 16.5 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள், அதே பகுதியிலுள்ள வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரதன் என்பவரது வீட்டில் பிள்ளைகளுடன் தனியே தங்கியிருந்த லட்சுமி என்பவரின் வீட்டினுள் புகுந்து ரூ 20 ஆயிரம் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.

கிராமப் பகுதியில். வீட்டில் உரிமையாளர்கள் இருக்கும்போதே நடந்துள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 08:23:04
Privacy-Data & cookie usage: