பெரம்பலூர் அருகே 18 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ. 20 ஆயிரம் கொள்ளை ! போலீசார் விசாரணை!!

schedule
2019-05-01 | 06:41h
update
2019-05-01 | 06:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

18 pounds gold jewelery Rs. 20 thousand robberies near Perambalur! Police investigate

பெரம்பலூர் அருகே வீட்டை பூட்டி விட்டு உரிமையாளர் வெளியே சென்றிருந்த நிலையில் மர்ம நபர்கள் நேற்று 18 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து கைவரிசை காட்டினர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு, ஜமாலிய நகரை சேர்ந்த சாதிக்பாட்ஷா என்பவரின் மனைவி மதினாபானு (வயது 36). சாதிக்பாட்ஷா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த மதினாபானு, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வீட்டை பூட்டி விட்டு அதே ஊரிலுள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 18 பவுன் தங்க நகை, 20 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்யைடித்து சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மதினாபானு , மங்களமேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.07.2026 - 02:07:19
Privacy-Data & cookie usage: