போலீஸ் வீடு உட்பட 3 வீடுகளில், 19 பவுன் தங்க நகை, 4 லட்சத்து 15 ஆயிரம் கொள்ளை: பெரம்பலூரில் மர்ம நபர்கள் கைவரிசை!

schedule
2021-09-16 | 17:20h
update
2021-09-16 | 17:20h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

19 pounds gold jewelery, 4 lakh 15 thousand robbed in 3 houses including police house: Mysterious persons handcuffed in Perambalur!

பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள ராஜீவ் நகரில், வசிப்பவர் கருணாகரன் மனைவி பூங்கொடி. இவர் தலைமை காவலராக உள்ளார். பூங்கொடி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருநள்ளாறு கோவிலுக்கு சாமி கும்பிட சென்று விட்டார். இதை அறிந்த கொள்ளையர்கள், பூங்கொடி வீட்டின் பூட்டை உடைத்து, 15 பவுன் தங்க நகை 4 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்தனர், .

Advertisement

இதேபோல் எம்.எம் நகரில், வசிக்கும் லித்தோஸ் உரிமையாளரான செல்வக்குமார் (37), என்பவரின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகை 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும், வெங்கடாஜலபதி நகரில் வசிக்கும் மணிவேல் என்பவரின் மனைவி கலைமணி என்பவரது வீட்டில், இரண்டு பவுன் தங்க நகை 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் வருபவர்கள் களவாடி சென்று விட்டனர்..

அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நிகழ்ந்த இந்த 19 பவுன் தங்க நகை மற்றும் 4 லட்சத்து 15 ரூபாய் ரொக்கப் பணம் திருடு போன சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் கொடுத்த, புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை கைப்பற்றி, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 07:14:17
Privacy-Data & cookie usage: