2 ஆண்டுகள் கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்திய பெண், மனம்மாறி முதல் கணவருடன் சென்றார்

schedule
2015-08-13 | 18:04h
update
2026-03-26 | 19:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூர் அருகே 2 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கள்ளக்காதலனுடன் சேர்த்து வைக்க கோரி உண்ணாவிரதம் இருந்த பெண் மனம்மாறி கணவருடன் சென்றார்.

பெரம்பலுர் அருகே கணவன் மற்றும் பிள்ளைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் ஊரை விட்டு சென்று 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய பெண், தன்னுடன் தற்போது குடும்ப நடத்த வர மறுக்கும் கள்ளக்காதலன் வீட்டு முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலுர் அருகே உள்ள பேரளியை சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி லதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் மகன் கண்ணதாசனுடன் லதாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவன் மற்றும் பிள்ளைகளை தவிக்க விட்டு , லதாவும், கண்ணதாசனும் ஊரை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர், இருவரும் சென்னைக்கு சென்று அங்கு 2 ஆண்டுகளாக குடும்ப நடத்தி வந்தனர்.

Advertisement

இந்நிலையில், லதாவின் பணம், நகைகளை செலவு செய்து விட்டதால், லதாவிடம் தனது பெற்றோரை பார்த்து விட்டு வருவதாக கூறிய கண்ணதாசன் பேரளிக்கு வந்தவர் சென்னைக்கு திரும்பி செல்லவில்லை.

தற்போது பெற்றோரின் சம்மதத்தின் பேரில் கண்ணதாசன் வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்து, திருமண ஏற்பாடு நடந்தது வந்ததை அறிந்த லதா பேரளிக்கு வந்து கண்ணதாசனின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களிடம் எனது கணவர் கண்ணதாசன் எங்கே என கேட்டுள்ளார். அதற்கு மாணிக்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணதாசனுக்கும் உனக்கும் எந்த தொடர்பும் கிடையாது, வீட்டை விட்டு வெளியே போ என கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த லதா தனது கணவன் வரும் வரை வீட்டை விட்டு செல்லமாட்டேன் என கூறி வீட்டு முன்பு உட்கார்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டார்.

கண்ணதாசனின் பெற்றோருக்கும், லாதாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டனர். இதில் மாணிக்கம் காயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் மருவத்துர் போலீசார் வழக்கு பதிந்து லதாவை கைது செய்தனர்.

பின்னர், நடந்த சமாதான பேச்சு வார்த்தையில், குழந்தைகளுக்காக லதாவின் முதல் கணவர் மனைவியை அழைத்து செல்ல சம்மதித்தார். எஸ்.ஐ. சத்யா உள்ளிட்ட போலீசார் மற்றும் உறவினர்கள் புத்திமதி கூறி லதாவை முதல் கணவருடன் அனுப்பி வைத்தனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.03.2026 - 19:57:12
Privacy-Data & cookie usage: