அரசு அலுவலர்களுக்கு 2 நாட்கள் ஆட்சி மொழிப் பயிலரங்கம் : பெரம்பலூரில் நடந்தது!

schedule
2022-12-16 | 15:17h
update
2022-12-16 | 15:17h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2 days official language workshop for government officials: Held at Perambalur!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2 நாட்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்றது. கருத்தரங்கினை டி.ஆர்.ஓ. நா. அங்கையற்கண்ணி தொடங்கி வைத்தார்.

Advertisement

இப்பயிலரங்கில் ஆட்சி மொழி அரசாணைகளும் செயலாக்கமும் என்ற தலைப்பில் மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் முனைவர் துரை. தம்புசாமியும், ஆட்சிமொழிச் சட்டம்/ வரலாறு என்ற தலைப்பில் மேனாள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் புலவர் ப. ஆறுமுகம்மும், மொழி பெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மூ. பாலகிருஷ்ணனும், ஆட்சி மொழி ஆய்வும், குறைகளைவு நடவடிக்கைகளும் என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க. சித்ராவும், அலுவலக குறிப்புகள் வரைவுகள், செயல்முறை ஆணைகள் உருவாக்குதல் என்ற தலைப்பில் மேனாள் தமிழ் வளர்ச்சித் துறைத் துணை இயக்குநர் க. சிவசாமியும், மொழிப்பயிற்சி என்ற தலைப்பில் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனைவர் க. தமிழ்மாறனும், கணினித் தமிழ் என்ற தலைப்பில் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் துரை. மணிகண்டனும் உரையாற்றினார்கள்.

இக்கருத்தரங்கில் 90க்கும் மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.05.2026 - 04:48:42
Privacy-Data & cookie usage: