வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 வாகனங்களும் நாளைய ஏலத்தில் கூடுதலாக விடப்படும் : பெரம்பலூர் காவல் துறை அறிவிப்பு!

schedule
2022-03-14 | 15:03h
update
2022-03-14 | 15:03h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

2 vehicles seized in cases to be auctioned off tomorrow: Perambalur Police

பெரம்பலூர் மாவட்ட காவல் துறை விடுத்துள்ள அறிவிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் மது விலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 20 வாகனங்களை, அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியபிரகாசம் தலைமையில் அவரது குழுவினரால் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரால் விடப்படுகிறது. மேலும் 2 இருசக்கர வாகனங்களையும் 15/03/2022 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலம் விட்டு ஏலத் தொகையை அரசு ஆதாயம் ஆக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த பொது ஏலத்தில் பெரம்பலூர் அரியலூர் தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது 9498159048, 6381075811 என்ற தொலைப் பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் ஏலம் எடுக்க வரும் நபர்கள் கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

Advertisement

ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 5000 முன் தொகையாக செலுத்தி தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும். பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். உடனிருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது.

அதிகபட்ச விலைக்கு வாகனங்களை ஏலத்திற்கு எடுத்தவர்கள் ஏலத்தொகை GST யுடன் சேர்த்து பிற்பகல் 03.00 மணிக்கு உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் தாங்கள் செலுத்திய காப்பீட்டு தொகை கழித்துக் கொள்ளப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் தாங்கள் கட்டிய காப்பீட்டு தொகையை திருப்பிதரப்படமாட்டாது. ஏலம் ரூபாய் 100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும்.

வாகனத்துடன், வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும் பதிவு செய்து வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். பொது ஏலத்தில் காவல்துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை.

வாகனங்களை 14.03.2022ம் தேதி காலை 10.00 மணி முதல் நேரில் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். ஏலம் எடுக்க வருபவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மற்றும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 18:12:44
Privacy-Data & cookie usage: