2 women injured as rain collapses house near Perambalur
பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமம் தேரடி கடைவீதி பகுதியைச் சேர்ந்தவர் மாச்சாப்பு மனைவி பாப்பாத்தி (வயது 60), இவர் அதே பகுதியில் சலவை தொழில் செய்து வருகிறார். இவரது உறவினருமான வள்ளியம்மை என்பவரும் தங்கி காலையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். கடந்த சில நாட்காளாக எசனைப் பகுதியில் மழை விட்டுவிட்டுப் பெய்து வருகிறது. இதில் பாப்பாத்தி, வள்ளியம்மை தங்கி இருந்த வீடு கடந்த 1986ல் கட்டப்பட்டுள்ளது. இதில் வீட்டின் மேற்கூரை கான்கீரீட் பகுதி நன்கு ஊறிப்போய் இருந்துள்ளது. நேற்றிரவு பெய்த மழைநீரில் வீட்டின் மேற்கூரை இன்று காலை சுமார் 7.50 மணியளவில் பொத்தென்று வீட்டினுள் விழுந்தது. இதில் வீட்டில் இருந்த பாப்பாத்தி மற்றும் வள்ளியம்மை மேல் கான்கீரிட் திட்டுகள் விழுந்ததில் படுகாயம் அடைந்தனர்.
.