6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை, 1 லட்சம் அபராதம்: பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பு!

schedule
2022-08-22 | 16:34h
update
2022-08-22 | 16:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

20 years in prison, 1 lakh fine for youth who raped 6-year-old girl: Perambalur court verdict!

பெரம்பலூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் மணிகண்டன் (26). கட்டுமானத் தொழிலாளியான இவர், கடந்த 4.1.2020-இல் 6 வயது சிறுமியை தனது வீட்டுக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து, அச் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மணிகண்டன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி முத்துக்குமாரவேல், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதத்தையும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 6 லட்சம் நிவாரணத் தொகை அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதன் பேரில், குற்றவாளி மணிகண்டனை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

விளம்பரங்கள்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.06.2026 - 15:36:16
Privacy-Data & cookie usage: