22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

schedule
2017-05-30 | 17:45h
update
2017-09-12 | 07:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிக்குமார் நில அளவைத்துறை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். நிதித்துறை இணைசெயலராக இருந்த வெங்கடேஷ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement

நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த கருணாகரன் வேளாண் கூடுதல் செயலராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த சந்தீப் நந்தூரி நெல்லை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

தேவகோட்டையில் சார் ஆட்சியராக இருந்த அல்பி ஜான் வர்கீஸ் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக கே.ராஜாமணி நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக கே.எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சாந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

மீன்வளத்துறைக்கு புதிய ஆணையராக தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார். மீன் வளத்துறை ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நகர மேம்பாட்டுத் துறைக்கு மாற்றம் போக்குவரத்து துறை புதிய செயலராக டேவிடார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக இருந்த பிரவீன் பி. நாயர், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையராக அனீஸ் சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 22:14:51
Privacy-Data & cookie usage: