25 couples get married in Perambalur; A. Raja. MP, runs at his own expense! District Secretary Kunnam C. Rajendran report!


பெரம்பலூர் மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 25 நரிக்குறவர்கள் ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை தனது சொந்த செலவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்‌.பி. நடத்தி வைக்கிறார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்‌ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். என பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில தெரிவித்துள்ளார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த 25 ஜோடிகளுக்கு தாலி, பட்டு வேட்டி, சட்டை, பட்டு புடவை, சீர்வரிசை பொருட்கள் என அனைத்தையும் தனது சொந்த செலவில் வழங்கி, இலவச திருமணத்தை திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.இராசா.எம்பி., தலைமையேற்று நடத்தி வைக்கிறார். பெரம்பலூர் ஜே.கே.திருமண மண்டபத்தில், 01-11-2023,(புதன்கிழமை), காலை 10.00 மணிக்கு நடைபெறும் இந்த திருமணத்திற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முன்னிலை வகிக்கிறார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய , நகர, பேரூர் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.

விளம்பரம்:


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!