25% reservation in private schools for free education: Application distribution

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர்வதற்காக ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ம் தேதிவரை இணையதளம் வயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14ம் கல்வியாண்டுமுதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப் படைத்தன்மையை உறுதி செய்யும்பொருட்டும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன் கீழ் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்களும் கூடுதலாக அரசால் வழங்கப்படுகிறது.

அதன்படி எதிர்வரும் 2017-18ம் கல்வியாண்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 19 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிக் பள்ளிகளில்) 398 இடங்களும், 50 மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளில் 812 இடங்களும் நுழைவு நிலை (LKG / I Std) ) வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் மொத்தம் 1210 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.dge.tn.gov.in , என்ற இணையதள வழியில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மே 18ம் தேதிவரை இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் இணையதளவழியில் விண்ணப்பிக்கும் போது பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கானச் சான்று, மாற்றுத் திறனாளிச் சான்று, மூன்றாம் பாலினத்தவருக்கான சான்று, ஆதரவற்றோர் சான்று போன்ற சான்றுகளை விண்ணப்பிக்கும்போது கொண்டு வரவேண்டும்.

பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். மேலும் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் வெங்கடேசபுரம் பெரம்பலூர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், கடைவீதி, துறையூர் சாலை பெரம்பலூர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகம் SSA – (வட்டாட்சியர் அலுவலக வளாகம் பெரம்பலூர் ), உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள்

பெரம்பலூர் உதவித் தொடக்ககல்வி அலுவலகம் ( ரோவர் பள்ளி பின்புறம்), வேப்பந்தட்டை உதவித் தொடக்ககல்வி அலுவலகம் (ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் வேப்பந்தட்டை) வேப்பூர் உதவித் தொடக்க கல்வி அலுவலகம் (அரசுமேல்நிலைப்பள்ளி வளாகம் வேப்பூர்) ஆலத்தூர் உதவித் தொடக்ககல்வி அலுவலகம் (அரசுமேல்நிலைப்பள்ளி வளாகம் பாடாலூர், ஆகிய மையங்களில் எவ்வித கட்டணங்களுமின்றி இலவசமாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

மேலும் மாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களையும் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம். பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்கு குறும் செய்தியாக அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்றவர், எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத் திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்பபடும்.

மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!