பெரம்பலூர் அருகே அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு : 24 பேர் காயம்

schedule
2018-05-20 | 14:04h
update
2018-05-20 | 14:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

281 bulls, 257 Youths participation: 24 injured in Annamangalam Jallikattu near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. அதன்படி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் அரசு வகுத்துள்ள விதிமுறைகளின் படி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினரின் கண்கானிப்பின் கீழ் ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டியானது மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.அழகிரிசாமி முன்னிலையில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாடு பிடி வீரர்களும் வருவாய்த்துறை மூலமாக முறையாக பெயர் பதிவு செய்யப்பட்டு, இரண்டு கட்டங்களாக மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க களமிரக்கப்பட்டனர்.

Advertisement

மேலும் மாடு பிடி வீரர்களின் உடல்தகுதி குறித்து மருத்துவக் குழுவினர் முழு ஆய்வு செய்த பின்னரே, அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

கால்நடை பராமரிப்புத் துறையினர் மூலமாக போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு போதைப் பொருள் ஏதும் தரப்பட்டுள்ளனவா, போட்டியில் கலந்து கொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா என்று சான்றளிக்கப்பட பின்னரே மாடுகள் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டன.

மேலும் மருத்துவத்துறையின் மூலம் மாடு பிடி வீரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் போது அவர;களுக்கு முதலுதவி அளிக்கும் மருத்துவக்குழுவினருடன், அவசர கால ஊர்திகளும் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன. காவல்துறையின் மூலம் காவல்த்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடைபெற்ற முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டது.

இன்று நடைபெற்ற போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 350 காளைகள் பதிவுசெய்யப்பட்டு, வருகைப்புரிந்த 298 காளைகளில் போதிய வயதில்லாத காரணத்தால் 17 காளைகள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 281 காளைகள் போட்டிகளில் பங்கேற்றது.

அதேபோல பெரம்பலூர் அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 257 மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்திருந்து பங்கேற்றனர்.

போட்டியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் அடக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் ஏராளமான சிறப்பு பரிசுகளை வழங்கினர்.

இன்றைய போட்டியில் பார்வையாளர்கள் 12 நபர்களுக்கும், மாடுபிடி வீரர்கள் 12 நபர்களுக்கும் என மொத்தம் 24 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வருவாய், கால்நடை பராமரிப்பு, காவல் துறை, ஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிட்ட பல துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 12:06:20
Privacy-Data & cookie usage: