2,936 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டது.

schedule
2015-10-24 | 11:31h
update
2026-06-18 | 00:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com


பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 மற்றும் 19 வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களுள் ஒன்றான விலையில்லா பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று தேரடி வீதியில் நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா, சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் நகர்மன்றத் துணைத் தலைவர் ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு 2,936 பயனாளிகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி மற்றும் கிரைண்டர்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர் மன்றத் தலைவர் ரமேஷ், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் ந.சேகர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தனலெட்சுமி, ஜெயலெட்சுமி, பெரம்பலூர் வட்டாட்சியர் செல்வராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 00:24:15
Privacy-Data & cookie usage: