பெரம்பலூரில் ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 30 பவுன் தங்கம், அரை கிலோ வெள்ளி; 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் திருட்டு!

schedule
2020-05-07 | 07:49h
update
2020-05-07 | 07:49h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

30 pound gold, half a kilo of silver at a retired officer’s house in Perambalur; 30 thousand rupees cash theft!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் எட்டாவது வார்டு ரங்கம்மாள் நகரில் பகுதியில் வசிப்பவர் வாசுதேவன்(65), ஓய்வுபெற்ற வேளாண் பொறியியல் துறை மேற்பார்வையாளர்கள் இவர் தனது மனைவி தேன்மொழி 50 மகன் வசந்தன் 28 மருமகள் புவனேஸ்வரி 24 ஆகியோருடன் நேற்று இரவு வழக்கம் போல் மாடியில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

Advertisement

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் வீட்டின் ஒரு அறையில் பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை அரை கிலோ வெள்ளி பொருட்கள் 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் மூன்று செல்போன்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்று தலைமறைவாகி விட்டனர்.

இன்று காலை தூங்கி எழுந்து பார்த்தபோது திருட்டு சம்பவம் பற்றி வாசுதேவனுக்கு தெரியவந்து உள்ளது இதனால் அதிர்ச்சி அடைந்த வாசுதேவன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் துப்பறியும் நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போதே துணிகரமாக நிகழ்ந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொது மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
13.07.2026 - 00:59:22
Privacy-Data & cookie usage: