பெரம்பலூர் அருகே 36 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.55 ஆயிரம் துணிகர கொள்ளை; போலீசார் விசாரணை!

schedule
2022-04-01 | 13:18h
update
2022-04-01 | 13:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

36 pounds gold jewelery, Rs 55,000 ventured robbery near Perambalur; Police investigation!

வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் திருடு போனது சம்பந்தமாக

பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (57), இவர் சிறுவாச்சூரில் உள்ள அரசு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் வேல்முருகன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். மகள்கள் அன்பரசி (27) , மங்கையர்க்கரசி (26) என 2 மகள்கள் உள்ளனர், அவர்களை அம்மாபாளையத்திலேயே திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

Advertisement

சுப்ரமணியனும் அவரது மனைவியும் செஞ்சேரி – செட்டிகுளம் பிரிவு ரோட்டிற்கு அருகில் கட்டியுள்ள புதிய வீட்டிற்கு சுற்றுச் சுவர் எழுப்பும் பணி வருவதால் கடந்த 10 நாட்களாக அங்கேயே தங்கி உள்ளனர். அவரின் தந்தை நாராயணன் அம்மாபாளையம் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சுமார் 8 மணியளவில் மங்கையர்கரசி தாத்தா நாராயணனுக்கு சாப்பாடு கொடுக்க வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை திறந்து அதில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்துள்ளது.

நெக்லஸ், தங்க செயின்கள், தோடுகள், மோதிரங்கள், மாட்டல்கள் என மொத்தம் 36 1/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணம் ரூ 55 ஆயிரம் என்பதும் தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு , தடய அறிவியல் நிபுணர்களுடன் சென்ஞ கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்னர்.

இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 11:40:43
Privacy-Data & cookie usage: