ஸ்ரீ சீரடி மதுரம் சாய்பாபா கோயிலில் மூன்றாம் வருடாபிஷேக விழா

schedule
2017-06-22 | 16:42h
update
2026-06-24 | 16:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

3rd Anniversary Celebration at perambalur Sri Shirdi Mathuram Saibaba Temple

பெரம்பலூர்: பெரம்பலூர் ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் 3ம் வருடாபிஷேக விழா இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

Advertisement

திருச்சி- சென்னை தோசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்நகர் எதிரே ரூ. 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்ரீ ஷீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபத்துக்கு கடந்த 22.6.2014 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதற்கான 3ம் ஆண்டு வருடாபிஷேக விழாவையொட்டி, இன்று காலை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மற்றும் பாபா அனுக்கிரக ஹோமம் நடந்தது. மதியம் சிறப்பு அலங்காரமும், ஆரத்தியும், அன்னதானமும் நடைபெற்றறது.

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து முளைப்பாரி மற்றும் பால் குடங்கள் எடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து, சாய்பாபாவுக்கு பால் அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 16:34:24
Privacy-Data & cookie usage: