மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு, பரிசுத் தொகை வழங்கல்

schedule
2017-03-14 | 11:51h
update
2026-06-27 | 22:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

3rd place at the state level exam in 10th to the appreciation of the students, prize award by collector

பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 2015-2016-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் க.நந்தகுமார் இன்று வழங்கினார்.

Advertisement

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவர் அ.ராம்கார்த்திக் என்பவருக்கு ரூ.15,000-ம், மிகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவியர்கள் : ரெ.நந்தினி மற்றும் அ.கரிஷ்மா ஆகியோருக்கு தலா ரூ.15,000-ம், சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்த மூன்றாம் இடம் பெற்ற மாணவியர் சே.அல்நிஹா செரின் என்பவருக்கு ரூ.15,000-ம் பரிசுத் தொகையாகவும், அனைவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் நற்சான்றுகளையும் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வழங்கிப் பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கு.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 22:31:29
Privacy-Data & cookie usage: