3ம் அலை கொரோனா விழிப்புணர்வு: டோல்கேட்டில், பயணிகளுக்கு கபசுர குடிநீர், அமுக்கார மாத்திரைகளை வழங்கினார் பெரம்பலூர் கலெக்டர்!

schedule
2021-08-04 | 15:24h
update
2021-08-04 | 15:24h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

3rd Wave Corona Awareness: Perambalur Collector distributes Kapasura water and Amukkara Tablet to passengers at Tollgate!

தமிழக அரசு, கொரோனா மூன்றாம் அலை வராமல் தடுக்க, தற்போது பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராவண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 01.08.2021 முதல் 07.08.2021 வரை கொரோனா விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்பட்டு, தினந்தோறும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டு வருகிறது. இன்று 4வது நாளாக,

Advertisement

பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில், கொரோனா விழிப்புணர்வு, வாரத்தை முன்னிட்டு, கலெக்டர் வெங்கடபிரியா, பயணிகளுக்கு கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா மாத்திரைகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், முகக்கவசங்களை, பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
மேலும் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பூசி எடுத்துக்கொள்ளுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என பயணிகள், சுங்கச்சாவடியில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் நடந்தது. மாவட்ட சித்த மருத்துவர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வருவாய்துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.08.2026 - 14:38:47
Privacy-Data & cookie usage: