பெரம்பலூர் அருகே மின் மோட்டார் திருடர்கள் 4 பேரை பிடித்து பொது மக்கள் தர்ம அடி; போலீசார் மீட்பு

schedule
2020-07-15 | 02:01h
update
2026-07-12 | 17:56h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

4 electric motor thieves caught by public People near Perambalur; Police rescue

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வெண்பாவூர் கிராமத்தில் நேற்று காலை, மின்மோட்டார்கள் திருட வந்த 4 பேரை பொது மக்கள் சுற்றி வளைத்து, பிடித்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கட்டி வைத்து, தர்ம அடி கொடுத்தனர்.

Advertisement

மின் மோட்டார் திருடர்கள் பிடிபட்ட தகவலறிந்து சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வெண்பாவூர் கிராமத்தில் திரண்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நாடறிந்த கை.களத்தூர் போலீசார் டிஎஸ்பி தேவராஜன் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருடப்பட்ட மின் மோட்டார்களை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கும் வரை திருடர்கள் 4 பேரையும் விடுவிக்க மாட்டோம் என பொது மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீசாரின் சமரச முயற்சியால் பொதுமக்கள் 4 திருடர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது வழக்குப் பதிவு செய்த போலீசார், திருடர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 17:56:26
Privacy-Data & cookie usage: