பெரம்பலூர் அருகே 4 துப்பாக்கிகள் பறிமுதல்! 2 பேர் கைது!

schedule
2023-12-23 | 11:36h
update
2023-12-23 | 11:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

4 guns seized near Perambalur! 2 arrested!

பெரம்பலூர் அருகே உள்ள மலையாளபட்டி கிராமத்தில் வனவிலங்குகளை சட்ட விரோதமாக வேட்டையாட வைத்திருந்த 4 நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த 2 பேரை ஒருங்கிணைந்த குற்ற உளவுப்பிரிவு போலீசார் எஸ் எஸ் ஐ அகிலாண்டேஸ்வரி தலைமையில் பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் உள்ள கவுண்டர பாளையம் மற்றும் பூமிதானம், வெட்டுவால்மேடு பகுதியில் சிலர் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு பச்சைமலை தொடரில் வேட்டையாடி வருவதாக, குற்ற உளவுப்பிரிவு எஸ் எஸ் ஐ அகிலாண்டேஸ்வரிக்கு கிடைத்த தகவலின் பெயரில், குற்ற உளவுப்பிரிவு எஸ் எஸ் ஐ-க்கள் சுலோச்சனா, ராகவன் ஜேம்ஸ், காவலர்கள் குமார், கதிரவன் சரவணகுமார் ஆகியோர் ரகசியமாக சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது மலையாளபட்டி கவுண்டர்பாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் அத்தியப்பன் என்கிற ஜேசிபி ராஜா (43), மற்றும் பூமிதானம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கலியன் (41) இருவரும் சட்ட விரோதமாக எஸ் பி எம் எல் ரக நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். அவர்கள் இருவரையும் அரும்பாவூர் காவல் நிலையத்தில் துப்பாக்கிகளுடன் ஒப்படைத்தனர். பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்த அரும்பாவூர் போலீசார் மேலும் நாட்டு துப்பாக்கி எப்படி தயாரிக்கப்பட்டது? எங்கே இருந்து பெறப்பட்டது? என அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.08.2026 - 21:41:35
Privacy-Data & cookie usage: