பெரம்பலூர் அருகே பூட்டிய வீட்டில் 4 பவுன் தங்கநகை, ரூ. 2 ஆயிரம் ரொக்கம் திருட்டு!

schedule
2020-07-03 | 06:22h
update
2020-07-03 | 06:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

4 pound gold coin at locked house near Perambalur, Rs. 2 thousand cash theft!

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி ரேவதி (வயது 29), விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மாமியர் மருதாம்பாள் (50), மகன்கள் ரக்‌ஷன்(7), ஹிருத்திக் ரோசன்(5), ஆகியோர் நேற்றிரவு கீழ் வீட்டை பூட்டி விட்டு, மாடிக்கு தூங்க சென்றார். இன்று காலை சுமார் 4 மணிக்கு மருதாம்பாள் பால் கறக்க வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது அறிந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது மோதிரங்கள் 3, செயின், மாட்டல், தாலிக்காசு, மற்றும் ரொக்கம் ரூ. 2ஆயிரம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 21:39:44
Privacy-Data & cookie usage: