பெரம்பலூர் அருகே விவசாயி வயலில் 400 கிலோ வெங்காயம் கொள்ளை!

schedule
2019-12-11 | 15:39h
update
2019-12-11 | 15:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

400 kg Onion robbery in a farmer’s field near in Perambalur.

Advertisement

பெரம்பலுார் அருகே, உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல்,35, இவர், தனது வயலில், சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று சக்திவேல் சென்று பார்த்த போது, வயலில் இருந்த, சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ வெங்காயத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, மருவத்துார் போலீசில் சக்திவேல் புகார் செய்தார். புகாரின்பேரில், மருவத்துார் போலீசார் வழக்கு பதிந்து, வெங்காய திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.04.2026 - 19:01:11
Privacy-Data & cookie usage: