பெரம்பலூர்அருகே 400 கிலோ சின்னவெங்காயம் கொள்ளை!

schedule
2020-11-28 | 06:48h
update
2020-11-28 | 06:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

400 kg small onion looted from farmer’s land near Perambalur

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கால் டன் (250 கிலோ) சின்ன வெங்காயத்தை அள்ளிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் துரைராஜ். விவசாயி இவருக்கு மாவிலிங்கை செல்லும் சாலையில் அம்மாகுளம் என்ற பகுதியில் உள்ள தனது வயலில் சின்ன வெங்காயம் பட்டறை வைத்து பாதுகாப்பாக செய்திருந்தார். இன்று காலை சென்று பார்த்த போது அதில் இருந்த சுமார் 400 கிலோ வெங்காயத்தை கொள்ளையத்து சென்றனர். அதன் மதிப்பு ரூ.40ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் ஆலத்தூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சின்ன வெங்காயம் கொள்ளை சம்பவம் நடந்து வருகிறது. இதனால் வெங்காயம் பட்டறை வைத்துள்ள விவசாயிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 00:43:55
Privacy-Data & cookie usage: